சொன்னதை செஞ்சு காட்டிய அஜித்.. குடும்பத்துடன் விமானத்தில் பறந்தார் AK.! வைரல் வீடியோ இதோ…

இயக்குனர் வினோத்தின் வலிமை படத்தில் கடைசியாக நடித்த அஜித் அடுத்ததாக ‘ஏகே 61’ படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். தனது படப்பிடிப்பை முடித்து கொண்ட நடிகர் அஜித்குமார், தற்போது லண்டனில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். சமீபத்தில், இங்கிலாந்து முழுவதும் தனது ஆடம்பர பைக்கில் பயணம் செய்த அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அஜித் குமார் தனது பைக்கில் சுற்றுப்பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, இப்பொது பைக்கிங் பயணத்திற்காக இங்கிலாந்து சென்றார். சமீபத்தில், அஜித்குமாரின் பைக் ட்ரிப்பில் ஷாப்பிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், அவர் கடை உரிமையாளரிடம் பேசுவதையும், அவரை வாழ்த்துவதையும் காணலாம். இறுதியில் அவரிடம் கைகுலுக்கி சென்றார். இதற்கிடையில், புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், இவரது மனைவி ஷாலினியும் அவரது மகனும் இருப்பது தெரிகிறது

இதையும் படிங்களேன் –  விஜய்யோட புது படம் கண்டிப்பா ஃபிளாப் ஆகும்… ஆதரத்துடன் அடித்துப்பேசும் சினிமா உலகம்..

ஏற்கனவே, இவர் இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதன்படி, இந்த வீடியோவில் அவர் தாடி முழுவதும் எடுத்துக்கொண்டது  போல் காட்சி அளிக்கிறார். இவர்கள் விமானத்தில் எங்கோ செல்வது போல் தெரிகிறது. இந்நிலையில், அஜித் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியதும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவார். இதனையடுத்து, அவர் தனது அடுத்த படத்தில் விக்னேஷ் சிவனுடன் கைகோர்க்கவுள்ளார்.

 

#AK sir with Family #Ajithkumar pic.twitter.com/qkw1qximLM

— 🔥 Ajith Kumar🔥 (@Anythingf4AJITH) July 5, 2022

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.