கோவை, நீலகிரியில் 2 நாள்களுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரியில் 2 நாள்களுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கோவை மற்றும் நீலகிரியில் இன்றும், நாளையும் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.