GRT Jewellers வழங்கும் ‘ஆடி ஆச்சரியம்’; அனைவருக்கும் ஆச்சரியமூட்டும் பரிசுகள்!

நிலையான தரம், கைவினைத்திறன் மற்றும் தரமான, சிறப்பான சேவையில் ஆபரணங்களை பாரம்பரியமும் அதிநவீன டிசைன்களை நம்பகமாகவும் வழங்குவதில் 1964 முதல் ஜிஆர்டி ஜூவல்லரஸ் புகழ் பெற்ற நிறுவனம் ஆகும்.

ஒவ்வொரு தருணத்தையும். சிறப்பானதாகவும், ஒவ்வொரு நிகழ்வுகளையும் மென்மேலும் மகத்துவம் மிக்கதாக மாற்றும் வகையில் பார்த்து பார்த்து நகைகளை உருவாக்குகின்றனர். இந்த ஆடியை ஜிஆர்டி உடன் கொண்டாடுங்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மில் பெரும்பாலானோர் ஆடி மாத ஷாப்பிங் செய்யும் வாய்ப்பை பெற இயலவில்லை தற்போது அந்த இனிய தருணம் மீண்டும் வாய்க்கப்பெற்றுள்ளோம். ஆகவே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து அதி உற்சாகத்துடன் கொண்டாடி நீங்கா நினைவுகளை உருவாக்கும் தருணம் வந்துவிட்டது.

ஜிஆர்டி ஜூவல்லரஸ்

இந்த ஆடியில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வாடிக்கையாளர்களின் ஆடி ஆச்சரியத்துடன் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு நகைகளுக்கும் ஒவ்வொரு நிச்சய பரிசுகளை ஏராளமாக வழங்குகிறது; வாடிக்கையாளர்களுக்கு தங்களின் பேங்க் பார்ட்னர்கள் மூலம் கேஸ்பேக் மற்றும் UPI பேமெண்ட்களுக்கும் ஆச்சரியமூட்டும் பரிசுகள் உண்டு.

இதுகுறிந்து ஜிஆர்டி நிர்வாக இயக்குனர் திரு.ஜி.ஆர்.அனந்த அனந்தபத்மநாபன் கூறுகையில், “ஜி.ஆர்டியில், எங்கள் வாடிக்கையாளர்களின் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் நாங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளோம், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிறுவனமாக இருப்பதால், பரந்த அளவிலான வடிவமைப்புகளையும் சிறந்த சலுகைகளையும் அறிமுகப்படுத்துவதை எப்போதும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஜிஆர்டியில் உள்ள ஆடி ஷாப்பிங் மகிழ்ச்சியான அனுபவம் மட்டுமல்ல. அனைவரையும் அற்புதமான பரிசுகளுடன் நிரப்பி அனுப்பும் அனுபவம்" என்றார்.

ஜிஆர்டி நிர்வாக இயக்குனர் திரு ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், குறிப்பாக பெருந்தொற்று காலத்திற்கு பிறகு. வரவிருக்கும் சுபமுகூர்த்த காலகட்டத்திற்கு முன்பாக ஆடியில் ஷாப்பிங் செய்ய விரும்பும் எங்கள் வாடிக்கையாளர்களைப் போலவே, நாங்களும் புதிய கலெக்ஷன்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆடியில் குடும்பங்கள் ஒன்று கூடி ஷாப்பிங் செய்வதற்கும் மற்றும் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு நிச்சய பரிசினை பெறுவதற்கும் இதுவே மடகந்த நேரம்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.