சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி: ஜப்பான் புறக்கணிப்பு

சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அதிகாரிகளை அனுப்பப் போவதில்லை என ஜப்பான் அறிவித்துள்ளது.

சீனாவில் உய்குர் இன இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுக்கிறது. இந்நிலையில், உய்குர் இன இஸ்லாமியர்கள் விவகாரத்தை காரணம்காட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளும் இதே போல் அறிவித்தன. இந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அதிகாரிகளை அனுப்பப் போவதில்லை என ஜப்பானும் அறிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.